PipeTmail Entertainment

தண்ணீருக்கு அடிமையாகிய பெண்: மரணம் கூட ஏற்படலாமாம்…

water_girl_002.w540

லண்டனைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் கென்னடி என்கின்ற பெண். இவர் சிறுவயதில் இருந்தே அதிகளவு தண்ணீர் குடிப்பது வழக்கம்.

இதுவே நாளடைவில் தண்ணீருக்கு அடிமையாக மாற்றிவிட்டது. இதன் பிரதிபலன் இன்று இப்பெண் நாளொன்றுக்கு 6 கலன்கள் கொண்ட நீரை அருந்துகிறார். இவருக்கு தற்போது 26 வயதாகிறது.

இது பற்றி இவரின் தயார் குறிப்பிடுகையில் இதுவரை இவர் எந்தவித உடல் உபாதைகளுக்கும் உள்ளாகவில்லை எனவும் நாளாந்தம் இரவு பகல் பாராமல் 6 கலன்கள் தண்ணீரை அருந்துவதாகவும் 40 தடவைகள் சிறுநீர் கழிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் இது இவரது உடல் நிலைக்கு உகந்ததல்ல எனவும் இதனால் இவரது உடற்கலங்கள் பாதிப்படைந்து மரணம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடுகின்றனர் வைத்தியர்கள்.

water_girl_003.w540

water_girl_004.w540

Posted in News | Tagged | Leave a comment

அஜித்தின் இந்த பிறந்தநாளும் ஏமாற்றமா?

ajith1
அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி ரிலீஸாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பில்லா II கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி ரிலீஸானது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துக்கொண்டிருக்கும் படமும் கடைசிகட்ட படப்பிடிப்பில் இருப்பதால் இந்த வருட பிறந்தநாளன்று அஜித் படம் ரிலீஸாகுமா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு படப்பிடிப்புக் குழுவிலிருந்து வெளிவரும் தகவல்கள் ஏமாற்றமானதாகவே இருக்கும்.

தற்போது விஷ்ணுவர்தன் படக்குழு துபாயில் பைக், படகில் அஜித் செய்யும் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த துபாய் ஷெடியூல் முடிந்ததும், சென்னையிலும் சில காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால் ஷூட்டிங் முடிக்கவே மார்ச் மாதம் முழுவதும் தேவையாம் படக்குழுவிற்கு.

அதன் பிறகு எடிட்டிங், சென்சார் என பல வேலைகளை முடித்து ஜூலை மாதம் தான் படம் ரிலீஸ் செய்ய முடியும் என்கிறது படக்குழு.

Posted in Cinema News | Tagged | Leave a comment

பிரியாமணியிடம் போலீஸ் விசாரணை…

Priyamani

தெலுங்கில் தற்போது பிரியாமணி நடித்து வரும் படம் “சாண்டி”. இது காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஐதராபாத்தில் இதன் துவக்க விழா நடந்தபோது பிரியாமணி படத்தில் நடிக்கும் கெட்அப்பிலேயே வந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன.

இந்த விஷயம் உளவுத்துறை மூலம் டில்லிக்குச் சென்றது. இதுகுறித்து உடனடியாக விசாரித்து முழு தகவலையும் அனுப்புமாறு டில்லி உயர் அதிகாரிகள் ஆந்திர போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆந்திர போலீசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும், நடிகை ப்ரியாமணியிடமும் கதை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.

ப்ரியாமணி “சாண்டி படத்தில் பெண் அரசியல்வாதி கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கதை முழுமையாக தெரியாது” என்று கூறியதாக தெரிகிறது.

இயக்குனர் சமுத்திரா படத்தின் ஸ்கிரிப்டின் பிரதியையே போலீசிடம் கொடுத்துவிட்டதாகவும் அதை போலீசார் உள்துறைக்கு அனுப்பி விட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதைத் தொடர்ந்து ரகசியமாக வைத்திருந்த கதையை இப்போது வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சமுத்திரா.

அவர் கூறியிருப்பதாவது: “இது அரசியல் கதைதான். ஆனால் தனிப்பட்ட யாரைப் பற்றியதும் அல்ல, சிலருடைய வாழ்க்கையை முன்னுதாரணமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர அரசியலில் புகழ்பெற்ற இளம் தலைவர் ஒருவர் அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்படுகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவரது தங்கையை கட்சிக்கு தலைமை தாங்குமாறு தொண்டர்கள் அழைக்கிறார்கள்.

கட்சியையும், நாட்டையும் காப்பாற்ற கல்லூரி மாணவியான பிரியாமணி அரசியல் கட்சியின் தலைவியாகிறார். அவர் சாதாரண பெண்தானே. அதுவும் மாணவிதானே என்று எதிர்கட்சியினர் எளிதாக நினைப்பார்கள். ஆனால் தனது புத்தி கூர்மையாலும், ராஜதந்திரத்தாலும் எதிரிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றி தேர்தலில் வெற்றி பெற்று எப்படி ஆட்சி அமைக்கிறார் என்பதுதான் கதை.

ஆந்திர அரசியலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் காட்சிகளாக இடம் பெறுகிறது. அரசியலிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்கிற கருத்தைச் சொல்லும் படம்” என்கிறார்.

Posted in Cinema News | Tagged | Leave a comment

நயன்தாராவை சீதையாக ஏற்கிறீர்களே அதைவிட…

vidya6

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான படம் தி டர்ட்டி பிக்சர்ஸ். இந்த படத்தில் சில்க் வேடத்தில் நடித்திருந்தார் வித்யாபாலன்.

அதில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு கடந்த ஆண்டின் சிறந்த நடிகைகான தேசிய விருதுகூட கிடைத்தது. இதனால் ஆபாசமாக நடித்திருக்கிறார் என்று வித்யாபாலனை விமர்சித்து வந்தவர்கள்கூட அதன்பிறகு வாயடைத்து போயினர்.

இந்நிலையில், தற்போது கர்நாடக இசைப்பாடகியான எம்எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜீவ்மேனன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் வித்யாபாலன்.

இதற்கும் வழக்கம்போலவே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கடுப்பான வித்யாபாலன், ஒருவரது வாழ்க்கை வரலாறை படமாக்க நினைக்கும்போது, அதற்கு பொருத்தமான நடிகையைத்தான் இயக்குனர்கள் தேர்வு செய்வார்கள்.

அதிலும் நான் சில்க் வேடத்தில் சிறப்பாக நடித்ததால், அந்த நம்பிக்கையில் இந்த வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது, ஆனால் இதில் நான் நடிக்கக்க்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

கோடான கோடி எம்எஸ்.சுப்புலட்சுமியின் ரசிகைகளில் நானும் ஒருத்தி என்று கூறியிருக்கிறார்.

மேலும், எத்தனையோ நடிகைகள் தெய்வங்களின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அவர்களை மட்டுமே ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை. நயன்தாராகூட ஒரு தெலுங்கு படத்தில் சீதையாக நடித்திருந்தார்.

இத்தனைக்கும் அவர் ஒரு கிறிஸ்தவ பெண் ஆனால் அதை யாரும் எதிர்க்கவில்லையே மாறாக, ஏற்றுக்கொண்டார்களே.

அப்படியிருக்க, நான் ஏன் எம்.எஸ் வேடத்தில் நடிக்கக்கூடாது என்றும் கேள்வி கேட்டுள்ளார் வித்யாபாலன்.

Posted in Cinema News | Tagged | Leave a comment

கணவனின் காமப் பார்வையை கட்டுப்படுத்த மனைவி எவளவு கஷ்டப்படவேண்டியிருக்கு… – வீடியோ

back1

திருமணமான ஆண்கள் திருமணத்திற்கு முன்னர் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் திருந்தி விடுவார்களாம்…

இப்படிப்பட்ட கணவன்மார்களை மேய்ப்பது மனைவிகளுக்கு பெரும்பாடாய் அமைந்துவிடும்….

அப்படியொரு சுவாரசியமான சம்பவம்தான் இது

Posted in News | Tagged | Leave a comment

ஐதராபாத் குண்டுவெடிப்பு எதிரொலி: இந்தியா கேட் அருகே பலத்த பாதுகாப்பு

blast

புதுடெல்லி, பிப். 24-

ஐதராபாத் தில்சுக் நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில போலீசார், தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, தலைநகர் டெல்லியில் ரோந்துப் பணியை அதிகரித்துள்ள போலிசார், இந்தியா கேட் பகுதியில் விழிப்புடன் காவல் காத்து வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள புல்தோட்டம், பூங்காக்களுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.

வியாபாரிகள், வழிப்போக்கர்கள், பொழுதுப் போக்குக்காக மாலை நேரத்தில் இந்தியா கேட் பகுதியில் கூடுபவர்கள் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

எனினும், வழக்கமாக இந்தியா கேட் வழயே கடந்து செல்லும் வாகனங்களுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

Posted in News | Tagged | Leave a comment

மாணவனை தாக்கி பணம் பறிப்பு: 2 கல்லூரி மாணவர்கள் கைது

arrest

சென்னை, பிப். 24-

அண்ணாசாலை ஒயிட்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் நாகராஜ் (19). நந்தனம் கலைக்கல்லூரியில் பி.காம் முதல் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் அண்ணா சாலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது புதுக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மன்சூர், ரிஸ்வான் ஆகியோர் நாகராஜிடன் தகராறில் ஈடுபட்டனர்.

திடீர் என அவரை தாக்கி ரூ.320 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து நாகராஜ் அண்ணா சாலை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவர்கள் மன்சூர், ரிஸ்வான் ஆகியோரை கைது செய்தனர்.

மாணவனை மிரட்டி பணம் பறித்ததாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Posted in News | Tagged | Leave a comment

நைஜீரியா: சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

nigeria
அபுஜா, பிப். 24-

நைஜீரியா நாட்டில் இயங்கி வரும் போக்கோ ஹரம் தீவிரவாதக் குழுவினர் அப்பாவி மக்களை தொடர்ந்து வேட்டையாடி கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள கோம்பே மாநில தலைநகர் பகாடாசாவில் நேற்று சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 5 பேரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண்மூடித் தனமாக சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 8 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம், பிளேட்டியூ மாநிலம் கோக்வாம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 10 பேரை மர்ம மனிதன் ஒருவன் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Posted in News | Tagged | Leave a comment

நேற்று வினோதினி! இன்று வித்யா!

Vidhya

Posted in News | Tagged | Leave a comment

Adhi bhagavan Movie Online Review ஆதி பகவன் விமர்சனம்(both Tamil n English)

aathi bhagavan

ஆதி பகவன்

ஆதி பகவன்…படம் கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான்……ஆனால் அமீரின் படமா? என்று பார்பவர்களை சற்று ஏமாற்றுகிறது ……படத்தின் ஆக்சன் கலந்த கதை நன்றாக இருக்கிறது….ஆனால் கதை சொல்லும் விதமமும் நடிப்பும் பிரமாதமாக இல்லை அமீரின் பழைய படங்களை நினைவு படுத்தினால் அவருக்கு இது தோல்வியே ……

ஜெயம் ரவியின் பகவான் பாத்திரம் சிலருக்கு மிகவும் பிடிக்கலாம் (ஆங்கில படம் டார்க் நைட்ல் வரும் ஜோக்கரை போல்)….அதுபோல் படத்தின் வரும் திருப்பங்கள் நன்றாக உள்ளது ….முதல் பாதியில் வரும் காட்சிகளுக்கு இரண்டாம் பாதியில் விடை கிடைகிறது…ஜனரஞ்சக ரசிகர்கள் இதை பொறுமையுடன் பார்பார்களா?? என்பது சந்தேகம் தான்….படத்தின் பாடல்கள் சொல்லி கொள்ளும் படி ஒன்றும் இல்லை…பின்னணி இசை சுமார்….ஒன்றுமே எதிர்பார்க்காமல் இந்த படத்திருக்கு போனால் பிடிக்கும்…..ஒரு தடவை பார்க்கலாம்….அமீர் இந்த படத்திற்கு அதிகமாக உழைத்தது போல் எந்த இடத்திலும் தெரிய வில்லை ….மொத்தத்தில் ஆதிபகவன் சுவாரசியம் இல்லை

aathi bhagavan

படத்தின் பிளஸ்

1) பகவானாக ரவி
2) திரைக்கதை
3) 2ஆம் பாதி

படத்தின் மைனஸ்

1)அமீர் சாயல் சுத்தமாக இல்லை
2)படத்தின் நீளம் மற்றும் வசனங்கள்
3)முதல் பாதி

ரேட்டிங் – 5/10 ஒரு தடவை பார்க்கலாம்

Adhi bagavan is a different attempt….But audience keep questioned wid disappoint is it a ameer movie????….Movies action script is good…but da story telling n acting is not upto da mark…compared to ameer’s old movies its going to be a disaster…the character named bhagavan acted by jayam ravi may be good for some peoples(it reminds joker Character from hollywood movie The dark knight)….Also da twists are more interesting….scenes came from the first half getting answer by second half only…can neutral audience be patience for this kinda story??? that is questionable…Song r very boring…Background is ok…if u goto da movie widout any expectation…u like it…but one time watchable….Ameers hardwork is not visible in this movie…Overall Adhi bagavan not so interesting….

aadhi-bhagavan-movie-
Movie plus

1)Ravi as Bhagavan Character
2)Screenplay
3)2nd half

Movie minus

1)No shade of Ameer
2)movie Lengh n Dialogues
3)First half

Rating – 5/10 One time watchable

Posted in Cinema News | Tagged | Leave a comment

பெண்கள் பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை

pragnant

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலி குறைய, மலச்சிக்கல் தீர ஒரு அருமருந்து உலர் திராட்சை ஆகும். உலர் திராட்சையில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.

திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

சாதாரணமாக மளிகைக் கடையில் கிடைக்கும் இந்த உலர் திராட்சையில், வைட்டமின் “பி” மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களின் கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம்.

அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால், பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டுக் காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி நீங்கும்.

உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.

Posted in News | Tagged | Leave a comment